தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா?
வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா?
பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா?
சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா?
இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா?
ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா?
பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா?
பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்டறையாக செயல்படுவது சரியா?
பெற்றோர்கள் பொய் சொல்லக்கூடாது என குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்துவிட்டு அவர்கள் முன்னாலேயே பொய்யிலே வாழ்ந்து கொண்டிருப்பது சரியா?
சினிமாக்காரனை கடவுளாகவும் அவனால் எல்லாம் மாறும் எனவும் நம்புவது சரியா?
எங்கு பிரச்சனையை பார்த்த போதிலும் அதனால் நமக்கு என்ன பாதிப்பு என/என்பதில் மட்டும் கவனம் செலுத்துதல் சரியா?
இப்படி இன்னும் கோடி. வேறொரு கோணத்தில் சிந்தித்தால் எது சரியென தெரியாத பல தவறுகள், எது தவறென புரியாத பல சரிகள்.
Will you read blog comments igris. Your writings are too good
பதிலளிநீக்குHi igris, could you please create separate broadcast for only blog.its my kind request
பதிலளிநீக்கு