முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆபாச படங்களின் உளவியல்

ஆபாச படங்கள் என சொல்லப்படுகின்ற, வாழ்க்கைக்கு தேவையான, நடைமுறை உடலுறவு குறித்த படங்களைப் பற்றிய என்னுடைய கருத்தையும், அதன் மீதான என்னுடைய பார்வையையும் பற்றிய ஒரு உரைதான் இது. ஆபாசப்படங்கள் எப்படி உருவாகின? அதன் பரிணாம வளர்ச்சி என்ன? அதை குறிப்பிடும் வண்ணங்களின் அதாவது நீலப்படம், மஞ்சள் பக்கம் போன்ற குறியீடுகளுக்கு பின்னால் இருக்கும் உளவியல் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் எழுதப் போவது இல்லை. அப்படி அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் விக்கிபீடியாவிற்கு செல்லுங்கள். இது அதற்கான இடமில்லை. இதை ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கு பதில் அடித்து முடித்தபின் வரும் அபரிமிதமான தெளிவுதான் இதற்கு காரணம் என்பேன். ஆண் வாசகர்களுக்கு இது புரியும். பெண் வாசகர்கள் தெரிந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான். முதலில் ஆபாச படங்கள் ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கின்றன என சிந்திப்போம். உடைக்குப் பின்னால் இருக்கும் உடல் எப்படி இருக்கும் என்ற தேடலில், முதலில் கிடைக்கும் குறிப்பாக எளியதாக கிடைக்கும் விடை இந்த ஆபாச படங்கள்தான். இந்திய கலாச்சாரத்தில் உடைகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்ற என்பது உங...