ஆபாச படங்கள் என சொல்லப்படுகின்ற, வாழ்க்கைக்கு தேவையான, நடைமுறை உடலுறவு குறித்த படங்களைப் பற்றிய என்னுடைய கருத்தையும், அதன் மீதான என்னுடைய பார்வையையும் பற்றிய ஒரு உரைதான் இது.
ஆபாசப்படங்கள் எப்படி உருவாகின? அதன் பரிணாம வளர்ச்சி என்ன? அதை குறிப்பிடும் வண்ணங்களின் அதாவது நீலப்படம், மஞ்சள் பக்கம் போன்ற குறியீடுகளுக்கு பின்னால் இருக்கும் உளவியல் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் எழுதப் போவது இல்லை. அப்படி அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் விக்கிபீடியாவிற்கு செல்லுங்கள். இது அதற்கான இடமில்லை.
இதை ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கு பதில் அடித்து முடித்தபின் வரும் அபரிமிதமான தெளிவுதான் இதற்கு காரணம் என்பேன். ஆண் வாசகர்களுக்கு இது புரியும். பெண் வாசகர்கள் தெரிந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான்.
முதலில் ஆபாச படங்கள் ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கின்றன என சிந்திப்போம். உடைக்குப் பின்னால் இருக்கும் உடல் எப்படி இருக்கும் என்ற தேடலில், முதலில் கிடைக்கும் குறிப்பாக எளியதாக கிடைக்கும் விடை இந்த ஆபாச படங்கள்தான். இந்திய கலாச்சாரத்தில் உடைகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்ற என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். போலவே, பெண்ணின் உறுப்பில் தன் ஒட்டுமொத்த பரம்பரையின் கவுரவத்தை வைத்திருக்கும் சில கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, உடல் அதாவது சதை/சதைப்பிண்டம்/கறி எப்படி இருக்கும் என்ற தேடல்தான் ஆபாச படங்களின் மீதான மோகத்தை அதிகப்படுத்துகின்றன.
அது ஏன் ஆண்களுக்கு மட்டும் இவ்வளவு மோகம்? பெண்கள் ஏன் ஆபாச படங்களை பார்ப்பது குறைவாக இருக்கிறது என வாதித்தோம் எனில், இங்கே இருக்கும் வளர்ப்பு முறை எனலாம். அதற்காக காம பிசாசாக வளர்க்கப் படுகிறார்களா என்ற கேள்வி எழுப்பாதீர்கள். ஒரு ஐந்து ஆண்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் உரையாடலில் நிச்சயமாய் ஒரு பெண்ணும், அந்த பெண்ணின் உடலுல் இல்லாமல் இருக்காது. ஆனால் பெண்களுக்கு அதற்கான போதிய இடமும், தெளிவும், அதைப்பற்றிய உரையாடலுக்குமான தேவையும் மிக குறைவாக இருக்கிறது. உடல் என்பது பொக்கிஷம் என்ற எண்ணத்தை கொடுத்து வளர்க்கப் படுகிறார்கள். சொல்லி வளர்ப்பதைவிட அவர்கள் பார்க்கும்/பழகும் மனிதர்களிடமிருந்து ஏற்படும் தாக்கம் முக்கிய காரணம் எனலாம். முதலிரவுக்கு முன் வரை, உடலுறவு என்பது எப்படி இருக்கும் என்ற விழிப்புணர்வு குறைந்தபட்சம் 40% பெண்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். மறுக்க நினைக்கிறீர்கள் எனில், மறுத்துக் கொண்டே இருங்கள். மற்றொரு பக்கம் பார்த்தால், ஆணாக இருப்பவன் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தெரிந்துகொள்ளாமல் இருந்தால்,"நீ ஆணா?" என்ற கேள்விக்கு ஆளாவான். கவுரவப் பிரச்சனை.
இந்த ஆபாசப் படங்கள் அப்படி என்னதான் செய்கின்றன? என்ற கேள்விக்கு ஒரு ஆணாக என்னுடைய, வெளிப்படையான பதில் என்னவெனில் கனவுகளையும், கற்பனைகளையும் அள்ளி தெளிக்கின்றன என்பேன். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில், ஒரு பெண் எக்காரணத்தை கொண்டும் தானாக முன்வந்து உடலுறவுக்கு அழைக்க மாட்டாள். காதலியாக கள்ளக்காதலியாக மனைவியாக இருந்தாலுமே அவளுடைய எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் எனில், ஏன் நீ கேட்க மாட்டாயா? எனக்கு கிடைக்கும் அதே சுகம் உனக்கும் கிடைக்கிறது அல்லவா? நீ கேள், நீ வேண்டு, நீ கெஞ்சு, நீ அடிபணி என்ற எண்ணம் இருக்கும். இவை அத்தனையையும் செய்ய ஆண் தயாராக இருப்பான் ஆனால் அதையும் மீறி ஒரு பெண் தன்னை தானாக முன்வந்து தரவே மாட்டாள் என்பதுதான் இங்கே பிரச்சனை. ஆனால் அது ஆபாச படங்களில் நடக்கும்.
ஒரு பெண் அவளாக முன்வந்து காமத்தின் கதவை திறப்பாள். ஆணுறுப்பை கொண்டாடுவாள். அதற்கு மகிழ்வாள். கட்டளைக்கு கீழ்படிவாள். உனக்காக வாழ்கிறேன் உனக்காக சாகிறேன் என்பாள். வெறும் 8 நிமிட ஆபாச படத்தில் ஒரு ஆணின் ஒட்டுமொத்த வாழ்வின் காம கனவுகளையும் பெயர் தெரியாத ஒரு பெண் நிறைவேற்றிவிட்டு செல்வாள். அந்த பெண்ணை, தான் விரும்பும் பெண்ணாக நினைத்து, அவள் தன்னிடம், இப்படி நடந்துகொண்டால் எப்படி இருக்கும்? என கற்பனை செய்துகொள்வான் ஆண். அந்த கற்பனை உருவாக, உடலுறவு எப்படி நடக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதை அறிந்துகொள்ள உதவும் ஆசானே ஆபாச படங்கள்.
ஒரு ஆணின் அதிகபட்ச கற்பனைத் திறமையை ஆபாச படங்களின் மூலம் காணலாம். நூற்றுக்கணக்கான வகைகள், ஆயிரக்கணக்கான உடலைமைப்பு கொண்ட நடிகர்கள், லட்சக்கணக்கான படங்கள் என அதை ஒரு பெரும் அமைப்பாக நடத்தி, பல்வேறு நிறுவனங்களாக உருவாக்கி, கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இதற்கு மொத்தமும் வெறும் ஆணின் இச்சை மட்டுமே காரணம் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இதுதான் உண்மை.
என்றாவது ஒருநாள் இது நடந்துதானே தீரும்? அதுவரை காத்திருந்தால் என்ன? என்ற கேள்வி எழுமின், நடக்கும்பொழுது நடப்பதை சரியாக நடத்திவிட வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு பெரும் தூண்டுதல் என்பேன். வாழ்வில் அத்தனை விஷயங்களிலும் தோற்றுப்போன ஒருவன், கடைசியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என அரும்பாடு படும் ஒரே இடம், கட்டில் மட்டும்தான் என்பது மறுக்கவியலா உண்மை.
இது ஒருபுறம் இருக்கட்டும். பார்த்தாயிற்று, தெரிந்து கொண்டாயிற்று, மீண்டும் அதற்கு அடிமையாவதற்கு காரணம் என்ன என சிந்தித்தோம் எனில் அதற்கு பெரும்பங்கு வகிப்பது, முனகல் சப்தம். உலகின் ஆகச்சிறந்த போதை இந்த முனகல் சப்தம்தான். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தின், கையாலாகாதத் தன்மையின் வெளிப்பாடு ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது. சிலர் இரண்டு மூன்று பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் இந்த முனகல் சப்தம்தான். இன்னும் ஆழமாக பேசினால், ஒரு பெண், ஒரு ஆணுடைய காதலியாகவோ மனைவியாகவோ இருக்கிறாள் என வைத்துக் கொள்வோம். அவன், அவளுடன் தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து ஒரு வேலையை, ஒரே இடத்தில் செய்து கொண்டிருக்கும்பொழுது ஏதோ ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டிவிடும். இது இருபாலருக்கும் பொருந்தும். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, சகித்துக் கொண்டு, உனக்கு நான் எனக்கு நீ என வாழ்பவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். அவர்களின் உடலுறவு வாழ்க்கை அவ்வளவு அற்புதமாக இருக்காது. இன்னொரு புறம், ஆணோ பெண்ணோ எனக்கு இந்த வாழ்க்கை சலிக்கிறது, நான் இதற்காக மட்டுமே இல்லை, எனக்கும் என் உடலுக்கமான தேவை இருக்கிறது, அதற்கான தேடலில் இறங்குகிறேன் என மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதுதான் சின்ன வீடு, செட்டப், கள்ளக்காதல் என உருவெடுக்கிறது. இதில் ஆணையோ பெண்ணையோ குறை சொல்ல எதுவும் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடு.
காதலரும் இல்லை, திருமணமும் ஆகவில்லை, ஒருவேளை திருமணம் ஆகி இருந்தாலும் உடலுறவில் திருப்தியில்லை ஆனால் மாற்று வழி தேட விரும்பவில்லை என்ற சூழ்நிலையில், உடலின் தேவைகளுக்கு வடிகால் இந்த ஆபாச படங்கள் மட்டுமே என்று சொன்னால், அது மிகையாகாது. சுலபமான மற்றும் எளிய மற்றும் மிக முக்கியமாக ரகசிய மற்றும் அவரச வழி என்றால் அது சுய இன்பம் மட்டும்தான். அந்த கதவின் திறவுகோல் ஆபாச படங்கள்.
கலந்தாலோசிக்காமல் கிடப்பில் விடப்பட்ட தலைப்புகள் எனில் அது செக்ஸ் எஜுகேஷன் மற்றும் ஆடை கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒன் நைட் ஸ்டேண்ட் மற்றும் லிவ்-இன்.
முதல் இரண்டும் நிச்சயமாய் இந்தியாவில் சாத்தியமற்ற ஒன்று. இந்த ஒன் நைட் ஸ்டேண்ட் என்பது மும்பை சென்னை பெங்களூரு போன்ற பகுதிகளில் வளர்ந்து வருகிறது. லிவ்-இன் கலாச்சாரமும் பெருகி வருகிறது. ஒரு கூட்டம் லிவ்-இன் என்பது பெரிய சமூக/கலாச்சார சீர்கேடு என அனத்திக் கொண்டிருந்தாலும், காலம் முழுக்க வாழப்போகும் இருவர், தன்னுடைய உடல் தேவையையும், தன்னுடைய இணையர் பூர்த்தி செய்வாரா என்பதை அறிந்துகொள்ள நினைப்பதும் அதற்கான முன்னெடுப்பும் சரிதான் என்பேன்.
சமூகத்திற்காக வாழ்ந்தது எல்லாம் போதும். உனக்காக வாழப் பழகிக் கொள்.
- எழுத்தாளுமை இக்ரிஸ். (22/06/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக