முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் பெண்கள்

கடந்த வாரத்தில் இன்ஸ்ட்டாகிராமில் பெண்களிடம் மீம் பக்கங்கள் அவர்களுடைய உடல் பாகங்களை புகைப்படமாக அனுப்ப சொல்லுதல் போலவே தவறான முறையில் பேசுதல் மற்றுமின்றி பணம் வாங்குதல் போன்றவற்றை செய்திருக்கிறார்கள் என்ற குற்றசாட்டுகளில் பலர் சிக்கி இருக்கிறார்கள். மாட்டிக்கொண்டதால் பலர் அக்கவுன்டை டீஆக்டிவேட் செய்துவிட்டனர். நீ எப்பொழுது மாட்டுவாய்? நீ எப்பொழுது டீஆக்டிவேட் செய்வாய்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. வருகிறேன். அவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற இடத்திற்கு நான் வரவில்லை. நான் ஆணாக இருப்பதாலும், போலவே முகத்தை மறைத்து பதிவுகள் இடுவதாலும் இது எப்படி நடக்கிறது என்பது எனக்கு குத்துமதிப்பாக தெரியும். அதை உங்களிடம் பகிர நினைக்கிறேன். என்னையும் நானே அசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டி வரும். பரவாயில்லை. பல பெண்கள் சம்மந்தப்பட்ட விசயம் எனும்பொழுது, ஊர் பேர் தெரியாத நான் என்னை தாழ்த்திக்கொள்வதில், தாழ்ந்துபோய் விட மாட்டேன். முதலில், ஃபாலோவர்கள் அதிகம் இருப்பதனால் அது ஒரு க்ரேஸை தருகிறது. இது ஆண் பெண் இருவருக்கும் உள்ள விசயம். அதனால் இவர்கள் சுலபமாக யாரிடம் வேண்டுமானாலும் என்ன வேண்...

என் காதலும் சுய உணர்தலும்.

வெகு நாட்களுக்கு முன், நான் என் பார்வையில் காதல் என எழுதி இருக்கிறேன் இதே ப்ளாகில். இன்று அதை எழுதுவது ஒரு ஓரமாக இருக்கட்டும், அதை படிக்க சொன்னாலே எனக்குள் ஆணாதிக்க திமிருடன் எழுதி இருக்கிறேன் என்ற குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. நிச்சயமாக என்னால் அந்த பதிவை மீண்டும் படிக்க இயலாது. சொல்கிறேன். என்னை இன்றுவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு எனக்கு சமீபத்தில் காதல் தோல்வியான விசயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு மூன்றாவது முறையாக காதல் தோல்வி ஆகிவிட்டது. இது ஏன் எப்படி நடக்கிறது என்ற கேள்வி இருந்தாலும், என்மேல் என்ன தவறு என்ற கேள்வி எனக்குள் இல்லாமல் இல்லை. இதற்கு முந்தைய இரண்டு காதலிலும் என்னுடைய தவறு என்பது பெரியதாக இல்லை என்றும் அவர்களின் மேல் தவறு இருப்பதாக, அவர்கள் செய்தது நிச்சயமாக தவறு எனவும் நினைத்துக் கொண்டும் நான் அங்கிருந்து விலக முற்பட்டேன். ஆனால் அவர்கள் தக்க வைக்க முயன்றதன் வெளிப்பாடு, வெடித்துக்கொண்டு நான் வெளியே வந்ததுதான். ஆனால் அது சரியா எனக்கேட்டால், அன்றைய தேதியில் அது சரியாக இருந்ததாக நானே நினைத்துக் கொண்டேன் என்பதில் எவ்வித...

சினிமா - முன்னுரை (பகுதி 1)

அண்ட பேரண்டத்தில் இன்றைய தேதியில் பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும், வாழ்கிறான் என்பது கோட்பாடாக இருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அப்படி அதுவே உண்மையாக இருக்கும் பட்சத்தில் அம்மனிதனால் ஆகக்கூடிய காரியங்கள் என எத்தனை எத்தனையோ இருக்கின்றன. பிரபஞ்சத்தை துலாவி பார்ப்பதில் துவங்கி அணுக்களை பிளந்து பார்க்கும்வரை மனிதன் தன்னால் முடியாது அல்லது இவ்வளவுதான் முடிந்திருக்கிறது என இருக்கும் ஒரு வரையரையை மீறி முயன்று அதில் தோல்வியோ வெற்றியோ எதையாவது ஒன்றை செய்துகொண்டேதான் இருக்கிறான். புதிய கண்டுபிடிப்பாகட்டும் அல்லது புதிய அழிவு முறையாகட்டும் ஆக்கலும் அழித்தலுமாய் மனிதன் முயன்று பார்க்காத விசயமென யாதொன்றும் இன்றுவரை இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு முயற்சியிலும் ஏகபோக சக மனிதர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதிக்காமலும் அவன் இருப்பதில்லை. இருந்தும், பெரும்பாலான மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என சொல்வோமேயானால் அது சினிமா. புகைப்படங்களை நகர்த்தி அதை காணொளியாக மாற்ற முடியும் என ஒருவன் நிரூபித்தான். அங்கே துவங்கியது மனிதனின் கற்பனையும், க...