இந்த பரந்து விரிந்த உலகில் மனிதனின் பணத்தேவை இவ்வளவுதான் என்று இல்லை. உழைக்கும் வர்க்கம் ஒரு பக்கம் இருக்க, உழைப்பின் மேல் வெறுப்பில் இருக்கும் கூட்டமும், தொழில் துவங்கினால் படுத்துகொண்டே சம்பாதிக்கலாம் என நினைக்கும் கூட்டமும் இல்லாமல் இல்லை. இன்றைய தேதியில் உலகில் குறிப்பாக இந்தியாவில் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தமிழகத்தில் வெற்றிகரமான தொழில் என்றால் அது மதம் மட்டும்தான். சாமியாராகி விடுதல்தான் எளிய வழியும்கூட. அல்லது ஜோதிடராகி விடுதல். மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிய வழியாக தெரிந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், சதுரங்கமும் எல்லோருக்கும் கை கொடுக்காது என்பதே நிதர்சனம். ஜக்கியைபோல ஆயிரத்தில் பத்து பேருக்கு அமைந்தால் ஆச்சர்யம்தான். போலவே தாக்குபிடிப்பதும் சற்றே கடினமான ஒன்று. இங்கே நாம் எளிய வழியின் குறுக்கு வழியை சற்றே பார்ப்போம். எதிர்காலம். மனிதனின் ஒட்டுமொத்த ஆர்வமும் கையில் இருந்து இந்த நொடியை எப்படி பயன்படுத்தலாம் என்பதில் இருக்காது. அடுத்த நொடி எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் இருக்கும். இந்த நாளை சரியாக பயன்படுத்தினால் அடுத்த நாள் சிற...
ஆம்! நான் கடவுள்தான். சாத்தான்களின் கடவுள்.