முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ப்ளாக் - 26 | பயணமும் நீயும் - ChatGPT சொல்லிய கதை

இன்று காலை விடிந்ததில் ஏதோ ஒன்றை இழந்து தவிப்பதாக, இனம்புரியா வெறுமையில் இருந்தேன். ChatGPT யிடம் இதை சொன்ன பொழுது,"நீ இதை கற்பனை செய்துகொள். மனம் சமாதானமடையும்" எனச்சொல்லி இந்த கதையை எனக்கு சொல்லியது. ஹோல்சம்மாக இருந்ததால் இங்கே பகிர்கிறேன். பயணமும் நீயும் உன் பயணக் குறிப்புகளில் இருந்து உனக்காக நான் எழுதியது – ChatGPT மாலை ஐந்து முப்பது. வானம் ஆரஞ்சு, மஞ்சள் கலந்த ஓவியம் மாதிரி. நீ உன் பழைய பைக்கை ஸ்டார்ட் பண்ணுற — “துக் துக்…” என்ற அந்த ஒலி, உன் நாளின் முதல் துடிப்பு. ஹெல்மெட் போட்டுக்கிட்டு, ஜாக்கெட்டின் ஜிப் பூட்டிட்டு, ப்ளேலிஸ்ட் ப்ளே பண்ணுற. 🎵 “ஆறுயிரே…” (VTV BGM) மெதுவா தொடங்குது. ஸ்ட்ரீட் லைட்கள் ஒன்னொன்னா ஒளிர்றது. காற்று முகத்தைத் தொட்டபடி போகுது. சாலையில் பெருசா வாகனங்கள் இல்லை. உன் முன், ரோடு மட்டும். இடது பக்கம் வயல், வலது பக்கம் தென்னை மரங்கள். தூரத்தில் கோயிலின் மணி ஒலி — அந்த ஒலி ரோட்டோடே கலந்து ஓடுது. நீ ஓரமா பைக்கை நிறுத்துற. ஏரிக்கரை. என்ஜின் ஆப். முழு அமைதி. நீ பைக்கின் டாங்க் மேல உட்கார்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்குறாய். தண்ணீரின் மேல் சூ...

ப்ளாக் - 25 | நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

இதை எங்கெங்கிருந்தோ துவங்க வேண்டும். ஆனால் நான் துவங்கும் அத்துவக்கத்திற்கு ஓர் விளக்கமும் குட்டி கதையும் சொல்ல வேண்டும். சொல்வதில் எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் படிப்பதில் உங்களுக்கு? சமீபத்தில் ஓர் சினிமா சேனல் இன்ஸ்ட்டாவில் உருவாக்கி இருந்தேன். சினிமாக்கள் பார்த்து அதைப்பற்றி பகிர்ந்து கொண்டு இருந்தேன். அதை உருவாக்கிய காரணம் என நான் கூறியது,"நான் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறேன். எனக்கு இப்பொழுது சினிமா பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு இதை பயன்படுத்தி கொள்கிறேன்." இதுதான் அதன் சாரம்சம். ஆனால் உண்மை அதுவா எனக்கேட்டால், சொல்கிறேன் படியுங்கள். இந்த இன்ஸ்ட்டா பக்கத்தை நான் எப்படி ஏன் ஆரம்பித்தேன் என்பதை ஒரு ப்ளாக் பதிவில் ஒரு துணுக்காகவும் பாட்காஸ்ட்டில் ஒரு காற்றுவாக்கு தகவலாகவும் சொல்லி இருந்தேன். அதற்குபின் இங்கே உருவான கூட்டம் என்னை பிரம்மிக்க வைத்தது. ஆனால் அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? தெரியாது. என்ன செய்ய நினைக்கிறேன்? குறைந்தபட்சம் அவர்களுடன் நேரம் செலவிட. ஆனால் பெரும் பிரச்சனை என்னெனில் இங்கே அனைவருக்கும் நான் யார் என்ற கேள்வி இருக்கிறது. அது மட்ட...