ஒவ்வொன்றிற்கும் ஒரு இஸம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு இஸத்திலோ அல்லது எதாவது ஒரு இஸ்ட்டாகவோ இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் பக்தி இருக்கிறது எனில் தீயிஸம், இல்லை எனில் ஏதீயிஸம், கும்பிடுவேன் ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் நியூட்ரலிஸம். இதில் குறிப்பாக நியூட்ரலிஸத்தில் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் தான் எந்த பக்கம் என்ற முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுபவர்கள். போலவே, பெரியாரிஸம், கம்யூனிஸம், மார்க்ஸிஸம், சேடிஸம் என ஏதோ ஒன்றை, ஒரு தத்துவத்தை, ஒரு தலைவனை, ஒரு கொள்கையை, பல நேரங்களில் நமக்கே தெரியாமல், புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் நம்மை சுற்றி இருப்பவர்களோ அல்லது நாம் பரவலாக பார்ப்பதின் தாக்கமாகவோ நாம் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நட்பு, காதல் என்ற உணர்வுகளில் துவங்கி வேலை, வாழ்க்கைமுறை என அனைத்திலும் இரண்டற கலந்து கிடக்கும் இந்த இஸங்களில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா? உண்டு! அதுதான் எஸ்கேப்பிஸம். இதை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது கேள்விப்படாமலும் இருந்திருக...
ஆம்! நான் கடவுள்தான். சாத்தான்களின் கடவுள்.