இன்றைய தேதியில் என்னைப்போல எழுத, என்னுடைய பதிவுகளையே எடுத்து பதிவு செய்ய பலர் உருவாகி வருகின்றனர். ஆனால் என்னைப்போல சர்ச்சைகளை ஏற்படுத்த நான் மட்டுமே இருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொண்டு இந்த பதிவை துவங்குகிறேன். இந்த பதிவு என் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்வதற்காக என நினைத்துவிடாதீர்கள். என்ன நடந்தது என்பதை சொல்வதற்காக. ஞாயிறுகளில் நான் Detox Day கடைபிடிப்பது வழக்கம் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிலேயே உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருக்காமல் இருந்தால் என்ன? சிறிது ஊரை சுற்றுவோம் என 15 நாட்களுக்கு முன் ஓசூர் சென்று இருந்தேன். அது ஒரு சர்ச்சையானது. அதனால் சென்ற வாரம் அமைதியாக இருந்துவிட்டேன். இந்த வாரம் தனுஷ்கோடி செல்லலாம், இந்தியாவின் கடைசி சாலையில் கால் பதிக்கலாம் என கிளம்பினேன். சென்று கொண்டிருக்கும்பொழுதே திடீரென திருச்செந்தூர் சென்றால் என்ன? என்றோர் எண்ணம். சரி, புது ஊர்களை காண்பதுதானே எண்ணம், எங்கு சென்றால் என்ன? என வாகனத்தை திருப்பி விட்டேன். திருச்செந்தூர் சென்று, கடலில் ஆசைதீர குளித்துவிட்டு கிளம்பியபொழுது அங்கே வந்த ஒரு முதியவர் என்னிடம்,...
ஆம்! நான் கடவுள்தான். சாத்தான்களின் கடவுள்.