முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசகர் கவிதைகள் - பகுதி 1

1) என்னிடம் இருந்து என்னை திருடிக்கொள்.

திருடிய என்னை உன்னுள் வைத்து ஒளித்துக்கொள், நீயே தேடினாலும் நான் கிடைக்காதப்படி.

நான் தனிமையை வெறுக்கிறேன், உன்னிடம் இருந்து தூரமாக இருப்பதை துயரமாக நினைக்கிறேன், அருகில் வந்து என்னை உன் கரங்களில் ஏந்திக்கொள். 

நமக்குள் இருக்கும் இந்த தூரத்தை உன் காதல் கொண்டு காணாமல் போக செய், உன் இதழ்கள் கொண்டு என் காயங்களை ஆற்று, நான் வாழ்ந்தால் அது உன் வீட்டில் மட்டும் தான், நான் இறந்தால் அது உன் மடியில் மட்டும்தான், என்னவனே நான் உன்னுடையது....

- சாத்தானின் தேவதை


2) என்னவனே!

என் மேனி முழுவதும் முள் வளர்த்து சென்று விட்டாய். நான் யார்மீது சாய்ந்துகொள்வது?

- ராஜா ரம்யா


3) கடைசி மழைத்துளியும் சிதைந்தது, துப்பாக்கியின் சிரிப்பால்... 🌾

- பல்லவி


4) பெருமழையிலும் நனையாமல் 

இலையின் அடியில் 

இருக்கும் எறும்பாய் 

என்னுள் நீ

- சோழனின் தாய்


5) கைகோர்த்து நடந்ததில்லை,

பூங்காவில் காலாற அமர்ந்ததில்லை,

திரையரங்கு சென்றதில்லை,

தித்திக்க பேசியதுகூட இல்லை.

குறுஞ்செய்தி மட்டுமே தூதுவர்கள்.. உனக்கும், எனக்கும்.

சில நேரங்களில் பதில் வராமல்,

பல நேரங்களில் பதில் கிடைக்காமல்,

தவித்த நொடிகளில் எல்லாம் மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றுகிறது,

நானும் ஒருவனை இவ்வளவு காதல் செய்கிறேனா என்று..

- நிலா


6) இன்றும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன் பழைய ஏமாற்றங்களை கடந்து நாளை எவ்வாறு போகும் உன்னைக் கண்டும்

சிரிப்பு ஒரு சிறந்த மருந்து

முற்றும் என்று சொல்லி முடிக்க விரும்பவில்லை. முடிவில் இருந்ததால் ஆரம்பம்.

போராட்டத்தில் கிடைக்காத வெற்றி பின் நாட்களில் கிடைத்தும் பலனில்லை.

அனைத்தும் கடவுள் பார்த்துக் கொள்வான் என்பது பொய். அப்படி பார்த்துக் கொண்டிருந்தால் இன்று நானே இருந்திருக்க மாட்டேன்.

ஒரு கூட்டத்தின் தலைவனை அடித்தால் அந்த கூட்டம் சிதறிவிடும் என்பது உண்மைதான். அப்பா அம்மா இல்லாத குடும்பம் சிதறிப்போய்தான் கிடக்கிறது.

ஏனோ நான் என்னிடமே கேட்டுக் கொள்கிறேன் என்று என்னிடம் இருப்பவன் என்னிடம் சொன்னான். உன்னை ஏமாற்றுவது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல என்று.

கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்னை மட்டுமல்ல அனைவரையும் ஏமாற்றும் இந்த ஏமாற்ற உலகின் அரசனை.

- பள்ளிக்கரணை கோ.சி பிரகாஷ்


7) அவளின் காரியம் முடிந்தது,

தூக்கி எறியப்பட்டான்.

தூக்கி எறியப்பட்டு பதினாறாவது நாள்,

அவனுடைய காரியமும் முடிந்தது.

- எம். விக்னேஷ்.


8)         யாரோ யாருக்காகவோ எழுதப்பட்ட வரிகளில் கூட எனக்கான வலிகளை உணர்கிறேன்.....

   

          நான் உனக்காக எழுதும் வரிகளில் கூட உன்னால் என் வலிகளை உணர முடியாமல் போனதுதான் எனதன்பின் சாபமோ...?


                    ஆரா...


9) கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு, ஏமாற்றம் என்றே உணர்ந்தேன்.

முடிந்த வரை முயன்றுவிட்டேன், ஆனால் விதி ஏன் மாறவில்லை?

வலியின் வழிகளை கடந்து சென்றேன்,

கடைசியில் நிம்மதி வரும் என நினைத்தேன்.

ஒவ்வொரு முறையும் அதனை அணுகும் போது,

உயிர் போகும் வலி வருவது ஏனோ.

எதிர்பார்த்த முடிவும் விலகி,

என்னை ஏமாற்றிய வாழ்வு.

பதிலின்றி நிற்கும் கேள்விகள், இனி என் பாதை எங்கு?

- கீர்த்தனா செல்லப்பன்


10) மனிதர்களைப்போல பறவைகளும் கண்டம் விட்டு கண்டம் செல்கின்றன. இப்படிக்கு நாடோடி.


நான் காற்றால் வரையப்பட்டவளா அல்லது காற்றால் கலைக்கப்பட்டவளா. இப்படிக்கு மேகம்

- அம்மு


11) தொலைவினில் செல்லும் மேகத்திற்காக  துடிப்பது போல் நடிக்கும் என் இதயத்திடம் என்ன சொல்வேன்..கலைவதன் மேல் காதல் கொள்ளாதே என்று..🦋

- கணினியா


12) முளைக்கும் விதை மரமாக, முடங்கிய விதை உரமாக

முளைத்த விதை பெரிதா? முடங்கிய உரம் பெரிதா?

- தமிழ் அரக்கன் (சுகுமாறன்)


13) எந்த கிளி ஏமாற்றியதோ தாடியுடன் நிற்கிறது ஆலமரம் 🌲

 ஒரு சுடுகாட்டுக்கு உயிர் தந்தது ஓர் பிணம் ☠️

 ஊதுகுழல் இசைக்கிறாள் அம்மா 

நடனம் ஆடுகிறது நெருப்பு ✨🔥

- சக்தி


14) கோவில்களில் உள்ள உண்டியல் எண்ணிக்கை யை கேள்விப்படும் பொழுது தான் புரிகின்றது, பாவம் செய்தவர்களின் எண்ணிக்கையை... எந்த பாவத்தை கழிக்க இப்படி கோடி கணக்கில் கோவிலுக்கு பிராயச்சித்தம் தேடுகிறார்கள் என்று

- ராஜ் வினோத்


15) மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் ஊரில் வந்து விசாரிக்கும் போது அதனை தடுத்த, குறை சொன்ன மனிதர்களை கொல்ல வேண்டும் என நினைத்தேன். கல்யாணம் முடிந்து வாழும்போதுதான் இந்த குறை சொன்ன மனிதர்கள் இன்று தெய்வமாக தெரிகின்றனர்.

- சந்திரசேகர்


16) என் குடும்பத்தினர் எனக்கு கடவுள்களைப் போன்றவர்கள். ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.

- பெயர் மறந்துவிட்டேன். வெகு நாட்களுக்கு முன் ஒரு வக்கீல் ஃபாலோவர் எனக்கு அனுப்பிய ஹைக்கூ.


17) எவர் கொடுத்தாலும் 

எவ்வளவு கொடுத்தாலும்

போதவில்லை..

மேலும் மேலும் வேண்டும் என

எங்கு கொடுத்தாலும்

போய் வாங்கிக்கொள்கிறேன் 

அன்பு என்ற பெயரில்

கொடுக்கப்படும் செருப்படிகள்.

- விஜயலக்ஷ்மி


18) ஆம் வயதிலிருந்து கல்லூரி கணிதவியல் வரை கட்டணம் கட்டி படிக்கவைத்தாள். தாய் ஒருத்தி.

வயது 50 ஆகியும் 

10ஆம் நாள்  சம்பளதிற்காக கையேந்தி நிற்க வைத்தான் கம்பனி வாசலில் பிள்ளை அவன்.

-பா.ப.யுவராஜ்


19) அவள் நெருப்பாக எரிந்துகொண்டிருந்ததாலோ என்னவோ அவளுக்கு தெரியவில்லை....

அவளை காக்கவே,மெழுகாக கரைந்து கொண்டிருக்கும் என் வலி என்னவென்று.....

- சுள்ளான்


20) அவளின் கவனக்குறைவால் தவறி விழுந்த கைக்குட்டை, குளிரில் கம்பளித் தேடித்திரிந்த அவனுக்கு கதகதப்பை கொடுத்தது.

- அறிவு


21) சிலரோடு  நெருங்கும்

முன்  ஓர் சிறு அளவீடுகள் இருந்திருக்கலாமோ....!  என அடிக்கடி நெஞ்சம் குமுறுது....! 

எல்லைகள்  கடந்த பின் வரும்  இடைவெளியினை... ஏற்றுகொள்ளமுடியாமல்  பெரும் எரிமலையாய் என் மனம்.....!

எல்லோர் முன்பிலும் சிரிக்கிறேன்  என் அகத்தின் சோகத்தினை மறைப்பதற்கே....   புரிந்து கொள்ளடி என் பேரன்பே ❤️

- Benny antony


22) 1. வறுமைக் கோட்டில் நிற்பதாய் தெரியவில்லை 

எதுவுமே இல்லாமல் இருக்கும் என்னை மலர்ந்த மனநிலையில் நிறுத்தி வைத்திருக்கும் உன்னை என்ன என்ன பெயர் சொல்லி அழைப்பது. என் அட்சயப்பாத்திரமே.


2. சிறிய காயம் 

பெரிய துன்பம் 

ஆறும் முன்னே அடுத்த காயம் 

உடலில் என்றால் மருந்து போதும் 

உள்ளம் பாவம் என்ன செய்யும் ? 


3. நித்திரையற்ற சாபத்தால் நிரம்பி வழிகிறது நினைவுகள் 


4.மெளனமாய் வர்ணிக்க காகிதமே என் ஆயுதம் 

எழுத எழுத குறையாமல் வருகிறாய்  படித்து தெரிந்துகொள் உன் படைப்பு அத்தனை பிரமிப்பு 


5 .இரவின் மெளனங்களின் உண்ணா விரதம் நீ வந்தே முடித்து வைப்பாய் என்ற உறுதியில் உறங்கிப்போனது 


6. தூது சொல்ல வாட்ஸ்ஆப்பும்,பேஸ்புக்கும் , இன்ஸ்டாவும்,இருந்தும் எழுத முடியாத குறுஞ்செய்திகள்  காதலை கனக்கச் செய்கிறது .


7. காதலின் தவிப்பும் பிரசவ வலிதான் வலிப்பது தெரிந்தும்  பாரம் குறையும் வரை போராட்டமே . 


8. விடியாத காதலுக்கு  அலங்காரம் செய்து அழகு பார்க்கிறது ஒவ்வொரு விடியலும் 


9. கண்கொட்டாமல் அவளும் பார்க்கிறால் 

கனவு கலைந்தது 


10. எழுதி கிழித்த காகிதங்களில் நடைபிணமாய் வாழ்கிறேன்

- ப்ரதாப்


23) பெண்ணே அறிவாயா உன் நிழலையும் முந்திக்கொண்டு உன்னை நெருக்கமாக பின் தொடரும் என் நினைவுகளை


பெண்ணே மீண்டும் ஒரு இரவு என்னுடன் இரு. காமத்திற்காக இல்லை நீ இல்லாமல் நான் உறங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறேன்  என்பதை அறிய

- லட்சுமணக்குமார்


24) எப்போதும் பிரியங்கள், தன் தலைமுடியை பிடித்துக்கொண்டு விடுவிக்கத் தெரியாமல் அழும் கைப்பிள்ளைகள்.

- வின்சி விஜு


25) என் மதி மயக்கும் மணம்..

அவள்,கூந்தலின் உள்ள பூவில் இருந்து வரும் நறுமணம்...❤️

- கார்த்திகேயன்.


26) அவளின் காதலை என் கைக்குள் அடங்கி வைத்துள்ளேன்.. மோதிரமாக 💍

- ஜெய்


27) என்னவனுக்கு ஒரு  கவிதை


எந்த உறவும் நிரப்பதா 

உன் இடம் 

எந்த உணர்வும்   நிந்திக்கதா 

உன் திடம் 

எனக்கெனவே 

எழுதப்பட்ட இலக்கணம் நீ 

எழுத்துப்பிழைகள் நிறைந்த

உன் இலக்கியம் நான் 

கவிதா


28) ஆசைகளெல்லாம் பூட்டி வைத்தேன்

தினமும் ஒரு ஏமாற்றதினால்,

ஏனோ பாவியின் மனம் தவிக்கிறது

கிடைத்துவிடுமோ என்று

இருந்தபோதிலும் 

விழிகளில் கண்ணீரோடு போராடிகொண்டிருக்கிறேன் ஏக்கங்களுடன் 🥹

அவளுக்காக நான்

- நந்தகுமார்


29) என்னுடைய அழுகையின் சத்தம் என் செவிக்கே கேட்கவில்லை எனும் போது உன் செவிகளில் எப்படி கேட்கும்....... உன்னிடம் இருந்து என் கண்ணீரை மறைக்க கற்றுக் கொடுத்த என் கண்களுக்கு உன் மீது நான் கொண்டுள்ள காதலை மறைக்க கற்றுக் கொடுக்க மறந்துவிட்டேனோ என்னவவோ.....


வெற்றி பெறுவது வள்ளுவனாயின் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்று போவேன் உன் வாசுகியாக........

உன் ஒட்டு மொத்த தமிழ் வார்த்தைகளை கொண்டும் விவரிக்க முடியாது நான் உன் மீது கொண்ட காதலை..........                

🤍(வள்ளுவனை நேசிக்கும் வாசுகியாக)🤍

- நந்தினி மணிகண்டன்.


30) கடந்த காலத்தில் செய்த தவறிலிருந்து தப்பிக்கொள்ளவதற்காக மனிதர்கள் எடுக்கும் ஒரு ஆயுதம் "எல்லாம் விதியின் செயல்"

- சரோஜினி


31) என் இதயத்தை திருடிக்கொண்டு,

என்னை இதயமற்றவள் என்கிறான் ... 💔

                             _San 💜


32) நிமிடங்கள் நின்று போக..

நொடிகள் சில மணி நேரங்கள் ஆனது..

என்னவள் கடந்து செல்லும் போது.

- IRON


33) வரிகளில் பிழைப்பவள் தான்

என்றாலும்,

வியப்படைந்தேன் வீரமிகு 

உன் சொல்லாற்றலில்!

பேதை நான் பேதலிக்கிறேன் தினம்,

போதைமிகும் உன்போதனையில்!

தூதுகென காத்திருந்தவள்!

காதலிக்கிறாள் இப்போது

சாத்தானின் சாயலில்

ஓர் தேவதூதனை!

✍️பொன் விநாயகி.


34) உரிமைக்காக போராடுவது தவறென்றால் அந்த தவறை ஒவ்வொரு நாளும் செய்வேன்.

- திவ்யா ஆனந்த்


35) என்னை ஏன் ஏற்று கொண்டாய் ஏமாற்றுவதற்கு ஏற்ற முகமென்று நீயும் தெரிந்து கொண்டாயா

- தனிமையின் காதலன்


36) கல்லூரி சாலையில் பூக்கும் பல வண்ண பூக்களில் நீ மட்டும் என் கல்லறை பூவாய் பூத்தது ஏனோ??? 

காதல் வலியும் மரண வலியும் ஒன்றுதான் தனிமை எனும் எமன் வந்துவிட்டால்!!!

- Jatdobbinu

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...