கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு.
முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்?
உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரிவினைகளும், மூடநம்பிக்கையும் எதுவும் இருந்திருக்காது. இதுவே நிதர்சனம். எனில் பலன் இல்லை எனும்பொழுது கடமை காணாமல் போகிறது.
கீதையில் கிருஷ்ணர் சொல்வது,"இங்கே நீ செய்யும் நன்மைகளுக்கு இங்கேயே பலன் கிடைக்கும் என எதிர்பார்க்காதே உனது சந்ததியர் நலமுடன் வாழ்வர் அல்லது நீ சொர்க்கத்திற்கு செல்வாய்" என்ற ரீதியில் இந்த தர்க்கத்தை கொண்டு சென்றோம் எனில் எனது சந்ததியர் நலமுடன் வாழ்வார்கள் என்பது என்ன நிச்சயம்? யார் சூரிட்டி தருவது? அப்படி நடக்கவில்லை எனில் நான் யாரை சட்டையை பிடித்து கேள்விகள் கேட்பது? சரி அது போகட்டும். சொர்க்கம் எங்கே உள்ளது? அதற்கு செல்லும் வழி என்ன? அதை பார்த்தவர்கள் யார்? சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு என்ன அத்தாட்சி? அங்கே குறிப்பிட்ட நபர் செல்வார் என்பதற்கு என்ன கியாரண்டி? ஒரே தெளிவான பதில், எவருக்கும் தெரியாது.
அப்படி இருக்க, கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது மடத்தனம் இல்லாமல் என்ன? அந்த பதிவிற்கான விளக்கம் இது. அதன் சர்ச்சை என்னென்று சொல்கிறேன்.
"யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள். ஆனால் அவர்கள் உன்னுடன் இருக்க வேண்டும் (அ) குழந்தை பிறக்க வேண்டும் (அ) திருமணம் ஆகவேண்டும் என எதையும் எதிர்பார்க்காதே.
இதையேதான் பகவத் கீதையும் சொல்கிறது,"கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே!"
இதுதான் அந்த பதிவு.
இந்த பதிவில் இரண்டு விதமான கருத்துகள் மட்டுமே இருந்தன. இரண்டே விதமான மனிதர்கள்.
1) யாருடன் வேண்டுமானாலும் என்றவுடன் உன் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் அல்லவா அவர்களுடன் நான் உடலுறவு வைத்துக்கொள்கிறேன். உன் பிறப்பு அப்படித்தான் இருக்கும். பெண்கள் என்றால் உனக்கு கேவலமா? வகையறா.
இதில் நான் யாருடன் என குறிப்பிடுவது எத்தனை பேருடன் வேண்டுமானாலும். அதாவது "பாடி கவுன்ட்" கலாச்சாரம். கலவி மட்டும் கடமை அல்லவா என்ன? அல்லது கலவி செய்யாமலே இருந்துவிடுவீர்களா? அல்லது எந்த ஆணையும் பெண்ணையும் நினைக்காமல், நினைத்தாலும் அவர்களை மட்டுமே நினைத்து வாழ்பவர்கள் இருக்கிறீர்களா என்ன? மியா கலீஃபா அல்லது ஜானி சின்ஸ் பிடிக்கும் என்பதற்காக அவர்களைத் தவிர வேறு யாருடைய ஆபாச படத்தையும் பார்க்காமல் இருக்கும் அளவிற்கு யோக்கிய சிகாமணிகளா நீங்கள்?
உன் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் அல்லவா?
இந்த கமெண்டை பல பெண்களே பதிவு செய்து பார்த்தேன். நீங்கள் பெண் இல்லையா? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? என்னால் திருப்பிகொண்டு அதே கேள்வியை கேட்க முடியாதா? அதை விட ஆபாசமாகவே கேட்க முடியும்.
அடுத்ததாக பிறப்பு பற்றி.
இங்குதான் பெரும் சிரிப்பு. இந்த பதிவை இட்ட நான் வேசி மகன் எனில் பல பெண்களை பார்வையாலேயே பலாத்காரம் செய்யும் நீங்கள் யார்? ஆபாச படங்கள் பார்த்து சுய இன்பம் மேற்கொள்பவர்களுக்கு பெயர் என்ன? இன்னும் சரியாக கேட்கப்போனால் பல பெண்களுடன் குதூகலமாக இருந்த சாட்ஷாத் கிருஷ்ண பரமாத்மா யார்? அவரும் வேசி மகன்தானோ?
அடுத்தது பெண்கள் என்றால் கேவலமா?
இந்த பதிவில் மட்டுமில்லை ஒரே ஒரு பதிவைத் தவிர வேறு எந்த பதிவிலும் நான் பெண்களைப்பற்றி தவறாக பேசியது இல்லை. அந்த வீடியோ காலில் மார்புகளை கேட்கும் சாட்சி என்னிடம் இருக்கிறது என்று வந்த கமெண்ட்க்கும் நான் அப்படி பேசி இருந்தால் அதை அனுப்பி வை என்ற தொணியில்தான் பதில் சொல்லி இருந்தனே தவிர நான் பலரிடம் பேசினேன் என்று அர்த்தம் இல்லை. அதையும் நீங்கள் உங்கள் இஷ்டக் கூந்தலுக்குத்தான் புரிந்து கொண்டீர்கள். போகட்டும்.
இப்பொழுது, கருவிற்கு வருவோம். அதாவது இரண்டாவது விதமான மனிதர்கள்.
2) "இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டான்" வகையறா.
அதில் நான் தனியாக வந்து இழிவுபடுத்த என்ன இருக்கிறது? அதுக்கு தேவையான அளவு இழிவை அதை பின்தொடரும் நீங்களே கொடுத்து விட்டீர்கள். இருந்தாலும் ஒரு வாய்ப்பு கொடுத்தேன். நான்கு நாட்கள் என் நேரத்தை ஒதுக்கி எதையாவது நிரூபிப்பீர்கள் என்று பார்த்தேன். இப்பொழுதுதான் கூத்து ஆரம்பம்.
> "இந்து மதத்தில் இருந்துகொண்டு நீ இந்து மதத்தையே எதிர்க்கிறாய் அந்த சுதந்திரம் இந்து மதம் வழங்கியிருக்கிறது. வேறு மதத்தில் இருந்திருந்தால் கொன்றிருப்பார்கள்."
நான் இந்து என யார் உங்களுக்கு சொன்னது? இந்துவாக இருந்துதான் இந்துவில் உள்ள குறைகளை சொல்ல வேண்டும் என இந்து மதம் சொல்கிறதா என்ன? போலவே கிறித்தவத்தை எதிர்க்கும் கிறித்தவர்களும் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களில் Anti-muslim களும் இருக்கிறார்கள். முத்தலாக் பிரச்சனையின் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுத்த பாதி பேர் இஸ்லாமியர்கள். இந்து மதத்தில் வெறும் மொட்டையடிப்பதற்கு எதிராக உங்களால் குரல் கொடுக்க முடியுமா?
> "இக்ரிஸ் என்பது இஸ்லாமிய பெயர். உனது குரானை படித்துவிட்டு வந்து பேசு."
இக்ரிஸ் என்பது ஜப்பானிய பெயர். அப்படியே இஸ்லாமிய பெயராக இருந்தால் நான் Anti-muslim ஆகத்தான் இருப்பேன் என்பது குறிப்பிடத்தக்கது.
> "நீ திமுக கைக்கூலி. பெரியாரியம் பேசும் சில்லறை"
இந்து மதம் என்ற அமைப்பிற்கு எதிராக என்ன பேசினாலும் இப்படி எதுவாகத்தான் இருக்க வேண்டும் எனில் இருந்துவிட்டு போகிறேனே. அந்த இரண்டு கட்டமைப்புகளையும் உடைத்தெறியும்வரை.
> "உன்னால் மற்ற மதங்களை பற்றி பேசிட முடியுமா? பேசிவிட்டு உயிரோடு இருந்துவிடுவாயா?"
நான் முதலில் கை வைத்ததே கிறித்துவ மதத்தில்தான். இப்பொழுது இந்துவை தொட்டிருக்கிறேன் அடுத்ததாக ஒவ்வொன்றாக உடைப்பேன். இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற எண்ணம் எனக்குள் இன்னும் இருக்கிறது என்பதால்தான் தொடாமல் வைத்திருக்கிறேன். பயந்து அல்ல. ஆனால் சில இஸ்லாமியர்களே என்னை வம்புக்கு இழுப்பதை பார்க்கும்பொழுது ரமலானில் பிறையை பார்ப்பதற்குமுன் என் பதிவை பார்ப்பார்கள் என கணிக்கிறேன்.
> "அர்த்தமுள்ள இந்துமதம் படித்து விட்டு பேசு"
கண்ணதாசன் என்றொருவர் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் மதம் மாறி சென்றிருப்பீர்களா என்ன? போலவே அதன் 10 பாகங்களையும் இன்றுவரை படிக்காமலா உங்களை ஒற்றைக்கு ஒற்றை வம்பிழுப்பேன்? உண்மையில் அவர் வைத்திருக்க வேண்டிய தலைப்பு,"அறிவுகெட்ட இந்துமதம்."
அடுத்ததாக கீதைக்கும் இந்த சோ கால்ட் இந்துக்களுக்கும் வருவோம்.
இந்த மடையர்களுக்கு மொத்தம் 60 கீதைகள் இருக்கிறது என்பதே தெரியாது என்பது எனக்கு கடந்த நான்கு நாட்களில்தான் தெரியும். இவர்களுக்கு தெரிந்தது மகாபாரதமும் பகவத் கீதையும். அதுவும் பகவத் கீதையில் உள்ள 18 பாகங்களும் தெரியாது, வெறும் கீதாசாரம் மட்டும்தான் தெரியும் என்பது பெரும் சிரிப்பு.
வியாசர் அரைபோதையில் உளறியதை விநாயகர் எழுதியதாக சொல்லப்படுகிற ஒரு கற்பனை கதையை கையில் தூக்கிக்கொண்டு, அதையும் காப்பாற்ற என்னிடம் சண்டைக்கு வந்தவர்களை பார்த்து என்னால் பரிதாபப்பட மட்டும்தான் முடிந்தது.
அதிலும் ஒருத்தரெல்லாம் கிருஷ்ணர் தமிழ்க்கடவுள் என்றார். அரண்டு போய்விட்டேன். வியாசரே ஒரு வடக்கு முனிவர் எனும்பொழுது கிருஷ்ணர் எப்படி தெற்கு கடவுளாவார்?
இன்னும் சிலரெல்லாம் மகாபாரதப்போர் உண்மையாகவே நடந்த ஒன்று என நம்புகிறார்கள். ஹரப்பா, மொஹஞ்சராதோ காலகட்டத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது இந்த போர். அந்த காலகட்டத்தில் இரும்பு பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களிடம் வாள், வில் அம்பு, கேடயம் அத்தனையும் இருந்ததாம். அதை நாம் அத்தியாவசியமாக நம்பியே ஆக வேண்டுமாம்.
இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட நான்தான் கடவுள் என உருண்டு கொண்டிருக்கும் கொக்கைன் ஆசாமி, ஹவாலா அரசன், அரசியல்வாதிகளின் கறுப்பு பண பெட்டி ஜக்கி வாசுதேவை இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து "அவர் சிவபெருமானின் மறு உருவம்" என கும்பிட்டாலும் கும்பிடுவார்கள் மழுமட்டைகள்.
இவர்களுக்கு பொது அறிவும் இல்லை, தன் மதம் சார்ந்த அறிவும் இல்லை. தனக்கு தன் மதம் வேண்டும் அல்லது அந்த மதத்தால் நடக்கும் நன்மைகள் வேண்டும் அது அரசியல் ரீதியாகவோ அல்லது பண ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ அல்லது குறைந்தபட்சம் சில்லறைத்தனமான பெருமை பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற மட்டமான எண்ணத்தில் சுற்றித்திரியும் இவர்களை அரசியல் தேவைகளுக்கு கட்சிகள் பயன்படுத்துவதில் யாதொரு தவறும் இல்லை. இவர்களுக்கு இது தேவைதான். சாகட்டும். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 👍.
கடைசியாக ஒன்றை சொல்லி இந்த பதிவை முடிக்க விரும்புகிறேன். மதத்தை பின்பற்றுங்கள் அல்லது எதிர்த்திடுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் குறைந்தபட்சம் மனிதனாக இருங்கள். குறைந்தபட்சம் அறிவுடன் இருங்கள். அது சரி அறிவு இருந்தால் எப்படி மதத்தை சார்ந்தவர்களாக இருப்பீர்கள்? சிலைகளை நம்பிக் கொண்டு இருப்பீர்கள்?
- எழுத்தாளுமை இக்ரிஸ் (03/03/2025)
👏
பதிலளிநீக்கு🔥🔥🔥✌🏼✌🏼✌🏼
பதிலளிநீக்கு👍
பதிலளிநீக்குThank you igris. I saw you mentioned me in Instagram channel
பதிலளிநீக்கு