1) ஒருத்தர்னால நமக்கு எந்த காரியமும் ஆகாதுன்னா நாம அவங்கள மதிக்க மாட்டோம். அதேதான் நமக்கும், மதிக்கப்படவும் மாட்டோம். இதுதான் நியதி.
2) எத்தனை முறை தட்டினாலும் திறக்காத கதவுக்கு பின்னால் இருப்பவர்கள் செவிட்டு முண்டங்களாக கூட இருக்கலாம்.
3) விற்க போகும்வரை வீட்டிற்கு மதிப்பில்லை.
4) வயிறு நிறைந்தபின் உணவை நினைத்தால் உமட்டல் வரத்தான் செய்யும்.
5) நண்பனும், முழுமுதற் எதிரியும் நம் சிந்தனைகள்தாம். மனிதர்களை கணக்கில் வைத்து நேரவிரயம் செய்யாதே.
6) ஆசைப்படுவது எதுவும் நடக்காது என்று புரியும் நேரத்தில், ஆசைப்படுவதையே நிறுத்தி இருப்போம்.
7) கோவம் வரும்போது தியானம் செய். கொலைகள் செய்வது சட்டப்படி குற்றம்.
8) அரசியல்/பண ரீதியான பலன் இல்லையெனில் இறந்த மூன்று மாதங்களில் குடும்பம் கூட மறந்துவிடும். இவர்களுக்காகவா கொள்கை கோட்பாடுடன் இயந்திர வாழ்க்கை வாழ்கிறாய்?
9) உன் காதில் விழுபவை எல்லாம் அவரவர் கருத்தும் அவர்கள் கேட்டறிந்த செவி வழி செய்திகளும் தான். உண்மை துளியும் இல்லை.
10) நேரத்திற்கு தகுந்தாற்போல் நடப்பது, ஏழையாய் இருந்தால் பச்சோந்தித்தனம் பணக்காரனாய் இருந்தால் ராஜதந்திரம். அவ்வளவுதான்.
11) எரிக்கப்பட்டாலும் புதைக்கப்பட்டாலும் சமாதியிலும் எரிமேடையிலும் ஒருத்தருக்கு மட்டுமே அனுமதி. எவராயிருப்பினும் பின்னரோ முன்னரோ தான்.
12) மனதை மட்டும் தயார் படுத்திவிடு. மற்றதை அதுவே பார்த்துக் கொள்ளும்.
13) ஹெட்போன் அணிவதை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். காது சும்மா இருந்தா பாய்வதற்கு பலர் வருவர்.
14) நீ யார் என்பது உன் பெயரிலோ செயலிலோ இல்லை. உன் மனதில் இருக்கிறது. யாருக்கு உண்மையாய் இல்லாவிட்டாலும் உன் மனதுக்கு உண்மையாய் இரு.
15) மார்கழி ஆரம்பித்து விட்டது. சளி காய்ச்சல் தலைவலி போன்ற சின்ன சின்ன வியாதிக்கெல்லாம் சுருண்டு விடாதே. நாம் சந்திக்க கேன்சர், எய்ட்ஸ், மாரடைப்பு, கை கால் செயலிழப்பு போன்ற பெரும் வியாதிகளே காத்திருக்கின்றன. Stay Strong.
16) நமக்கு பிடிக்கவில்லை என்பதற்கு தவறு என்று அர்த்தம் இல்லை.
17) வாழு, வாழ விட்டால்.
வாழ விடு, நீ வாழ்ந்த பின்.
18) ரேசிஸ்ட்-டாக வாழாதீர்கள். எவ்வித பேதமும் இன்றி அனைவரையும் வெறுத்திடுங்கள்.
19) புரிவதற்குள் முடிந்து விடுவதுதான் வாழ்க்கை.
20) யாராவது உன்னை அவமானபடுத்தினால் மௌனமாக இரு. காரோ, குட்டி யானையோ, ஈச்சரோ, லாரியோ வாங்கியபின் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்.
21) "ஒரு பொண்ணு அண்ணன்னு கூப்பிட்டா அன்னைக்கே" என்றோர் பழமொழி உண்டு கிராமப் புறங்களில். அதை தம்பி என்று மாற்றி அக்காக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் ஆன்லைன் ஆண்கள்.
22) தனிமையே சிறந்தது என்று வாழ ஆரம்பிக்கும்போது ஆறுதல் சொல்ல, தோள் கொடுக்க ஒருவன் நிச்சயமாக வருவான்.
உண்மையில் அப்படி ஒருவன் இல்லை. வாங்க போய் மனநல மருத்துவரை பார்ப்போம்.
23) பலான படங்கள் பார்க்கும்போது "ச்ச, கேமராமேன் பாவம்ல" என்ற எண்ணம் வர ஆரம்பித்துவிட்டால் வயதாகிவிட்டது என அர்த்தம்.
24) இங்கு ஒரே வெற்றியாளர் மரணம் மட்டுமே.
25) காத்திருக்கிறோம் என தெரிந்தும் காத்திருக்க வைப்பவர்களை ஏதாவது செய்துவிட்டால் அதற்கு சட்டப்படி என்ன தண்டனை என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
26) உனக்கு வழி காட்டிய கைகளை என்றும் மறக்காதே. சரியான வழியாக இருந்தால் தங்கத்தால் கைமாறு செய். தவறான வழியாக இருந்தால் இரும்பினால் மாறு கை செய்யலாம்.
27) கொலை செய்ய தூண்டியவருக்கு தான் தண்டனை அதிகம் எனில், வம்பிழுத்து கொலை செய்ய தூண்டியவனை கொலை செய்து அவனுக்கான அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையை நாமே வழங்கிவிட்டால் என்ன தவறு? சட்டப்படி உயிரெடுத்தால் தண்டனை, தனி மனிதன் செய்வது கொலையா?
28) புரியாதவர்களுக்குத்தான் விளக்கம் எல்லாம், புரிந்துகொள்ள முயலாதவர்களுக்கும் விரும்பாதவர்களுக்கும் அல்ல.
29) பேசாதே! பேசினால் கைதாகும் வரை நிறுத்தாதே.
30) எந்த கடவுளாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது.
ஆனால் ஒரு நல்ல வக்கீலால் முடியும்.
31) வீடு கார் நகைகள் என பொருட்களின் பின்னால் ஓடுவதை என்று நிறுத்துகிறாயோ அன்றுதான் உன்னால் உண்மையான சுதந்திரத்தை பெற முடியும்.
32) பணத்திற்கு பின் "*தகாத வார்த்தை* என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்" என்னும் அளவிற்கு தைரியம் தருவது நேர்மை மட்டும்தான்.
ஆனால் இந்த இரண்டும் ஒரு சேர எந்த மனிதனிடமும் இருக்காது.
காரணம்..
நேர்மையும் கோவமும் இரட்டை பிறவிகள்.
பணமும் திமிரும் இரட்டை பிறவிகள்.
கோவமும் திமிரும் நேர் எதிரானவை. அதனாலேயே நேர்மையும் பணமும் எதிரானவை ஆகின்றன.
33) புகை பிடிப்பதும் ஒரு வகையில் தியானம்தான். கோபத்தில் கொலைகாரர்கள் ஆகி இருக்க வேண்டிய பலரை சிகரெட் சாந்தப் படுத்தி இருக்கிறது.
34) மற்றவர்கள் உன்னிடம் எப்போது ஏன் பேச நினைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டால் ஆட்டம் உன் கையில் இருக்கிறது என்று அர்த்தம்.
35) காவலர் ஒருவர் "பாத்ரூமில் குற்றவாளிகள் வழுக்கி விழுவது அத்தியாவசியம். இது குற்றங்களை குறைக்கும்" என்று பேசிய காணொளி ஒன்றை பார்த்தேன்.
பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் சிறை சென்றால் அவர்கள் செல்லும் கழிவறை வழுக்கி விடாமல் இருக்குமா இல்லை கழிவுகளை காவலர்களே சுத்தம் செய்வார்களா?
36) உன்னை சீண்டுபவனை நீ பெட்ரோல் ஊத்தி கூட கொளுத்தி விடு, தவறில்லை. ஆனால் மனது புண் படும்படி மட்டும் பேசாதே.
இதைதான் வள்ளுவரும், "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" என்கிறார்.
37) எதிர் கருத்து உள்ளவர் எல்லாம் எதிரி இல்லை. அதேபோல் எல்லா கருத்துகளுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
38) சட்டப்படி, உன் மேல் அடி விழுந்தால் நீ திருப்பி அடிக்கும் முதல் அடி மட்டும் "self defence". அந்த முதல் அடிக்கு பின் யாரால் எழுந்து நிற்க முடியும் என நீ நினைக்கிறாயோ அவரே உன் எதிரி. மற்றவனெல்லாம் ஓடும் காரைப் பார்த்து குறைக்கும் நாய். கடந்து செல்.
39) பள்ளி/கல்லூரி மாணவனால் கூட கஞ்சா விற்பவனை தேடி கண்டுபிடித்துவிட முடிகிறது, ஆனால் காவல்துறையால் முடியவில்லை.
40) AC அறையில் வாழும் கல்லூரி மாணவர்களை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. Duke வாங்கி தர மாட்டேன் என பெற்றோர் சொன்னால் தூக்கு மாட்டிக்கொள்ள கூட மின்விசிறி இருக்காது. ப்ச்.
41) தற்கொலை செய்ய கடலளவு துணிச்சல் வேண்டும். தற்கொலை எண்ணம் வந்து அதிலிருந்து மீண்டுவிட்டால் அந்த கடலே வெறும் குளமாக தெரியுமளவிற்கு துணிச்சல் வந்துவிடும். இந்த முயற்சியில் வென்றவன் தோற்றுவிடுவான், தோற்றவன் தோற்கவே மாட்டான்.
42) ஒருவேளை விபத்து நடந்தால் கைகள் கால்கள் உடலின் மற்ற பாகங்கள் நசுங்கி எலும்புகள் சுக்கல் சுக்கலாக நொறுங்கி போனாலும் தலைக்கு ஒன்றும் ஆகாது. தலைகவசம் அணியுங்கள். தலை கவசம் உயிர் கவசம்.
43) மனிதர்களின் மீது நம்பிக்கை இழந்து வெறுப்பு வர ஆரம்பித்துவிட்டால் மனதை அமைதியாக வைத்துக்கொள். நல்ல தெரபிஸ்ட்டை பார். நல்ல வக்கீலையும் பார்க்கலாம்.
44) குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைத்துவிட்டால் செயின் அறுப்பு, செல்போன் பறிப்பு என்று சின்னதாக செய்து மாவுக்கட்டு வாங்காதே. சட்டத்தை விலைக்கு வாங்குமளவிற்கு பெரியதாக செய். முடியாவிட்டால் சாகும்வரை வேலைக்கு செல். நீ குறுக்கு வழிக்கு தகுதியற்றவன்.
45) குற்றம் செய்ய முடிவு செய்து விட்டால் முதலில் சட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்.
46) நீ கொலை செய் கொள்ளையடி ஊரை அடித்து உலையில் போடு என்ன என்ன தோன்றுகிறதோ அத்தனையையும் செய்து செத்தொழிந்து போ. எக்காரணத்தை கொண்டும் விருப்பமில்லாத எந்த ஒரு பெண்ணையும் தொடாதே.
Be a man. ஆம்பளையா இருங்கடா.
47) ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்தவுடன் இரண்டு மூன்று கோவில் அல்லது நாலு ஐந்து காவல் நிலையம் ஆரம்பிக்கலாம் என சிந்தித்தால் நீயும் என் நண்பனே.
48) பணம் வெறும் காகிதம்தான், ஒரு பொழுதும் சந்தோஷத்தை தராது. ஆனால் பணத்தினால் ஆகக்கூடிய காரியங்கள் தரும்.
49) ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அல்லது அதை முந்திக் கொண்டு செல்பவர்களை பார்த்தால் ப்ரேக்கே பிடிக்காத ரெண்டு மண்ணு லாரியும் ரெண்டு தண்ணி லாரியும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
50) தவறுகள் செய்யாதே. ஒருவேளை செய்துவிட்டால் எக்காரணத்தை கொண்டும் மன்னிப்பு கேட்காதே. அது மாபெரும் வன்முறை.
- தொடரும்..
: எழுத்தாளுமை இக்ரிஸ்.
கருத்துகள்
கருத்துரையிடுக