முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தானின் போதனைகள் - 2

51) தூக்கத்திலேயே இறந்து விடுபவர்கள் லட்சம் பேர் இருக்கையில் நாமெல்லாம் முழித்ததே பெரும் அதிசயம். அப்படி இருக்க அடுத்த அறுபது ஆண்டுகள் குறித்த கவலை உனக்கு எதற்கு? இந்த நொடியில் கவனம் வை.

52) துரோகிகளின் பிறந்தநாளில் அவர்களுக்கு பரிசளிக்க மறக்காதே. நாட்டு வெடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.

53) ஒதுக்கப்படும் வரை ஒருவரிடம் அன்பை எதிர்பார்க்காதே. பார்த்தவுடன் பிடித்து, பழகினால் புளித்துவிடும் வெறும் மனிதர்கள்தான் நாம். எவருடைய அன்பிலும் தேங்கி நின்று விடாதே.

54) எக்காரணத்தை கொண்டும் தற்கொலை செய்ய நினைக்காதே. மீறி செய்தே ஆகவேண்டும் எனில் குறைந்தபட்சம் ஐம்பது பேருடன் செய்துவிடு. மரணமாவது சரித்திரமாகட்டும்.

55) ஒன்று அடி அல்லது அடி வாங்கு. வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்படி அடித்திருக்கலாம் இப்படி மிதித்திருக்கலாம் என ஏகவசனம் பேசாதே.

56) Let them realise-களையும் let them regret-களையும் 2024 உடன் மூட்டை கட்டி ரோட்டோரத்தில் வீசி விடு.

let them suffer, let them bleed, let them beg for death என்னும் புதிய தீர்மானங்களுடன் 2025 ஐ துவங்கு.

புத்தாண்டு வாழ்த்துகள்.

57) நீ சோகமாக இருந்தால் வாட்ஸ்அப்பில் என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என யோசிப்பாய். நான் என்னை சோகமாக்கியவர்களை எப்படி போடலாம் என யோசிப்பேன்.

நீயும் நானும் எப்போதும் சமமானவர்கள் இல்லை.

58) மன்னித்து விடு, கர்மா பதில் சொல்லும், கடவுள் பார்ப்பார் போன்ற மனதை தேற்றும் வசனங்களை இணையத்தில் பரவலாக பார்க்கிறேன். 

அவ்வளவு பலவீனமானவனா நீ?

59) பிறரின் வாழ்க்கையை பார்த்து பொறாமை வர ஆரம்பித்தால் சிறுது நாள் யார் கண்ணிலும் படாமல் எங்காவது சென்றுவிடு. நீ மிகவும் ஆபத்தானவனாக மாறிக் கொண்டிருக்கிறாய்.

60) சைடு ஸ்டேண்ட் எடுக்காமல் செல்பவர்களை எச்சரிக்கை செய்யாதே. அவர் இந்த சபிக்கப்பட்ட வாழ்வில் இருந்து விடுபட முயன்று கொண்டு இருக்கலாம். அதை தடுக்க நீ யார்?

61) தினமும் காபி குடிக்கும் கடையில் இருந்து மாறி வேறு கடைக்கு செல்வதே பெரும் துரோகம் என கருதுகிறேன்.

62) வாகனம் வருகிறது என தெரிந்தும் தெனாவெட்டு கூந்தலாக சாலையை கடப்பவர்கள், வயதானவர்களை தவிர்த்து அத்தனை பேரும் அடிபடுவதற்கான சகல தகுதிகளும் உடையவர்கள்.

63) சட்டப்படி எல்லாமே சரியாக இருக்க முடியாது. நியாயப்படி சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்.

64) நீ வழங்கும் மன்னிப்பு "இதற்கு பேசாமல் தண்டித்தே இருக்கலாம்" என்று எண்ணும் அளவிற்கு இருக்கும்படி பார்த்துக் கொள்.

65) வாயில்லா ஜீவன்கள் மேல் அன்பு செலுத்துங்கள். குறைந்தபட்சம் அவைகளை வறுக்கலாம் பொறிக்கலாம் குழம்பு வைக்கலாம் உப்புகறி போடலாம் இன்னும் பலவற்றை செய்யலாம். மனிதனால் எந்த பயனும் இல்லை.

66) சாலைகளில் நாய்களை அடித்து தூக்கிவிட்டு அவைகள் துடி துடித்து சாகும் என தெரிந்தும் நிற்காமல்கூட செல்லும் வாகன ஓட்டிகளின் குழந்தைகள் அதேபோல் சாலைக்கு வரும்பொழுது 👍

67) ஒரு கட்டத்துக்கு மேல் நாம் ஆசைப்படுவது எல்லாம் விலை உயர்ந்ததாக இருக்கும் அல்லது சட்ட விரோதமானதாக இருக்கும். இவ்வளவுதான் வாழ்க்கை.

68) நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்தில் முகம் பார்க்க, தலைமுடி கோத கண்ணாடியை திருப்பினார்கள் என்றால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல தலையை.

69) உடல்நிலை சரியில்லை எனில் மருத்துவத்தை தேடி ஓடாதே.

"சரியானா ஆவு, இல்லைன்னா சாவு" என விட்டுவிடு. துணிந்தவனுக்கு ஒருபோதும் மரணமில்லை.

70) உன்னை வெறுப்பவர்கள் உன்னைப் பற்றி என்னென்ன அவதூறு பேசுகிறார்களோ பேசட்டும் என விட்டு விடு.

பொட்டல் காடுகளில் வட்டமடிக்கும் பிணந்தின்னி கழுகுகளுக்கு அவர்களை இரையாக்கினால் அவைகூட அந்த வாயை உண்ணாது. புழுக்கள்தான் அரித்தெடுக்கும்.

71) உறக்கத்தில் வருவதான் கனவு. உறங்க விடாமல் செய்தால் அது Depression அல்லது Insomnia அதிகப்படியாக Trauma.

கலாம் சொல்லிச் சென்றது முற்றிலும் தவறு 👍

72) அர்த்த ராத்திரிகளில் அதிகம் பயணம் செய். அடித்துப் பழக வழிப்பறி திருடர்கள் கிடைப்பார்கள்.

73) நூலிழையில் வீரம் ரவுடித்தனமாக மாறிவிடும். கையாள தெரியாமல்தான் பலர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

74) நமக்கு தீங்கு இழைத்தவர்கள் ஆனந்தமாக வாழ்வதைப் பார்த்து கலங்கி துன்புறுவதை விட அவர்களை கண்டம் துண்டமாக்கிவிட்டு சிறையில் சிறகடித்து பறக்கலாம்.

75) குற்றம் செய்தவனுக்கு அபராதம் மட்டுமே தண்டனையாக கிடைக்கும் எனில் பெரும் குற்றவாளி பணம் இல்லாதவன் மட்டும்தான்.

76) நம்மளால ஒன்னுமே பண்ண முடியாது (அ) நமக்கெதுக்கு வம்பு என்ற நிலையை தான் இவர்கள் மெச்சூரிட்டி, அமைதியாக இருப்பதே பலம் என அறிவுரையாக திணிக்கிறார்கள்.

மூத்தவர்கள் சொல்வது அத்தனையும் வேதவாக்கு அல்ல. புரிந்து கொள். வீரர்களுக்கு மட்டுமல்ல, தொடை நடுங்கிகளுக்கும் வயதாகும்.

77) சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றோர்களையும், பிச்சை எடுப்பவர்களையும் நினைத்தால் சிரிப்பாக வருகிறது. ஒரே ஒரு குற்றம் செய்தால் இருக்க இடமும், உண்ண உணவும், உடுத்த உடையும் தர இந்த அரசாங்கம் தயாராக இருக்கும்போது பிச்சை எடுப்பானேன்?

78) இன்று போகி. பழையனவற்றை எல்லாம் எரியூட்டும் திருநாள். அதற்காக யாரும் அவர்களது பழைய காதலர்களை போட்டு எரித்து விடாதீர்கள். அஹிம்சை வழியில் பொங்கலை கொண்டாடுங்கள். வாழ்த்துகள் ❤️

79) இருசக்கர வாகனத்தில் அகராதியாக அதிவேகமாக சாகசங்கள் செய்துகொண்டு குறிப்பாக R15 (அ) Duke ல் சென்றவன், பார்த்தவர்கள் இரத்தம் உறைந்து செய்தி சொல்ல கூட நா எழாமல் கூக்குரலிடும் அளவிற்கு குரூரமாக அடிபட்டு அவனது உடலை சாலையிலிருந்து சுரண்டி எடுத்தார்கள் எனும் செய்தி பேரானந்தம் தரக்கூடியது.

80) பெரிய கடையில் பேரம் பேசும் திராணி பலருக்கும் இருப்பதில்லை,தெரு கடையில் வம்பு செய்து பாதி விலைக்கு வாங்குகிறார்கள். மேலே இருப்பவனிடம் பயந்தோ மரியாதையாகவோ ஒதுங்கியோ இருக்கனும், கீழே இருப்பவனை மிதிக்கலாம் என்ற எண்ணம் இது. நாடாளும் மன்னனுக்கும் அடித்தால் வலிக்கும். அனைவரும் சமம்தான்.

81) தலைக்கவசத்திற்கு பணக்கவசம் என பெயர் வைத்திருக்க வேண்டும். தலைகளை விட அதிகமாய் பணத்தைதான் பாதுகாக்கிறது.

82) இறப்புக்கு பயப்படுகிறாய் என்பதற்காக வாழ்ந்துகொண்டே இருக்க முடியுமா? இறந்தே ஆக வேண்டும் என்பது நியதி எனில் இருப்போ இறப்போ வம்படியாக உனக்கு பிடித்தாற்போல அமைத்துக் கொள். அதுவே சரித்திரமாகும்!

83) குவாட்டருக்கு 500 ரூபாய் கூட செலவு செய்ய முடியாது எனில் இன்றோடு குடியை விட்டுவிடு! மூளை மழுங்குதல், நரம்பு தளர்ச்சி, கை கால் செயலிழப்பு, குடல் குந்தாணி அழுகுதல், திடீர் மரணம் போன்றவைகள் பணக்காரனுக்கு நடப்பது வெகு குறைவு.

84) நாம் அழிந்தொழிந்து போய்விட வேண்டும் என்று நினைத்தவர்களின் கண்களில் மரண பீதியை பார்க்கும் தருணம் ஆகச்சிறந்த போதை.

85) அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். மொத்தத்தில் கொலைதான் ஒரே தீர்வு!

86) மன்னிப்பு பெரும் குற்றம். அது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையையும் தவறு செய்வதற்கான தூண்டுதலையும் ஒரு சேர தந்துவிடும்.

87) சிகரெட்டுக்குப் பின்னான தன்னம்பிக்கையும் தைரியமும் அசுரத்தனமானது.

88) ஆஸ்தான பிறக்கும் வழியான பெண்ணுறுப்பை விட்டுவிட்டு புது வழியை உருவாக்கி வயிற்றை கிழித்துக்கொண்டு பிறந்தவர்கள், வாழ வழி தெரியவில்லை என்கிறார்கள்.

செத்துப்போ.

89) என்னை பற்றி பலரும் ஆளாளுக்கு அவர்கள் விருப்பப்படி judgement செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் எழுதி எனக்கு கடிதமாக அனுப்பி வையுங்கள். வீட்டில் டாய்லெட் பேப்பர் தீர்ந்துவிட்டது.

90) பிறர் கண்ணில் படுவதற்கு முன் உனக்குள் இருக்கும் நல்லவனை சித்ரவதை செய்தேனும் கொன்று விடு. இந்த சமூகத்திற்கு அவன் தேவையற்றவன்.

91) சோகத்தில் இருந்து விரக்தியாக அதிலிருந்து வெறுப்பாக அதிலிருந்து கோபமாக மாறிய எரிமலையை உணர்ந்து இருக்கிறாயா? கண்ணில் படுபவர்கள் கழுத்தெல்லாம் அழகாக தெரியும்.

92) இப்பொழுதெல்லாம் எவர் லிஃப்ட் கேட்டாலும் கொடுத்து விடுகிறேன். தனியாக சாவதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை.

93) நீ ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் உனக்கான முக்கியத்துவத்தை வலுக்கட்டாயமாக இழந்து விடுவாய்.

94) ஆதியில் ஒருவன் தகாத வார்த்தைகள் தான் தேசிய மொழி என்று சொல்லி இருந்தால் மண்டையாட்டி கடைபிடித்து இருக்கும் இந்த மந்தையாட்டுக் கூட்டம்தான் இன்று "அய்யயோ கெட்டவார்த்தை" என சொல்லாத இடத்தில் சுண்ணாம்பு தடவியதைப் போல துடித்து கொண்டு இருக்கிறது.

95) இவர்கள் என்ன சைக்கோ கொலைகாரன் சினிமா எடுக்கிறார்கள்? நானாக இருந்தால், செத்தவனை 38 துண்டாக வெட்டி மாவட்டத்திற்கு ஒரு துண்டாக வீசி எறிந்து விடுகிறான் கொலைகாரன் என எழுதி படமாக்குவேன். கடைசிவரை கண்டே பிடிக்க முடியாத, முடிவே இல்லாத தொடர்கதையாக இருந்திடும்!

96) இன்றைய தேதியில் சாட்சியுடன் நிரூபிக்கப்பட்ட குற்றங்களைவிட, ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்பேற்றப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்ட குற்றங்களே அதிகம். வாயை திறக்காத வரை தவளைக்கு எந்த கேடும் இல்லை.

97) பிறர் சாக வேண்டும் எனக்கேட்ட பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றிய கடவுள், எந்த சிறைச்சாலையிலும் அடைக்கப்படவில்லை.

98) ஒன்று ஏழைகள் சாக வேண்டும் அல்லது பணக்காரர்கள் கொல்லப்பட வேண்டும். மூன்றாவதாக ஒரு வழி பணத்தினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு நிச்சயமாய் இல்லை.

99) இந்தியாவில் கஞ்சாவை புகைத்தல் சட்டப்படி குற்றம். பாலில் போட்டு காய்ச்சி பாங்கு பாலாக குடித்தால் குற்றமில்லை. ஆகவே..

100) "ஆமாம்! நான் இப்படித்தான்." என்ற அறிவிப்பிற்கு பின்னான வாழ்க்கை சுதந்திரமானது.


- தொடரும்..


: எழுத்தாளுமை இக்ரிஸ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...