உங்களுக்கு தெரிந்து சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சென்றிருந்தேன். தனுஷ்கோடி செல்ல வேண்டிய நான் மனது மாறி திருச்செந்தூர் சென்றது அதனால் ஏற்பட்ட கலவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு 15 நாட்களுக்குமுன் ஓசூர். அதுவும் ஒரு சர்ச்சையானதை நீவிர் அறிவீர். சர்ச்சைகளை விலக்கி வைத்து பார்த்தால் இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது நானோர் ஊரோடி. பயணம் செய்வது என்னுடைய பல பொழுதுபோக்குகளில் ஒன்று. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட என் மனநலத்திற்கான சிகிச்சை எனலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல், ஒரு தேவை, ஒரு தப்பிக்கும் வழி தேவைப்படும். அதைப்பற்றி, எஸ்கேப்பிஸம் என்ற ப்ளாக் பதிவில் விளாவரியாக எழுதி இருப்பேன். என்னை ஒப்பிட்டு சொல்லுவோமேயானால்., எனக்கு சினிமா, புத்தகம், பாடல், அனிமே, வெப் சீரிஸ், டிவி சீரிஸ், மாங்கா, காமிக்ஸ், சில நேரங்களில் அரசியல், பயணம், வெற்று உரையாடல்கள், மது அருந்துதல் என எக்கச்சக்க தப்பிக்கும் வழிகளை வைத்திருக்கிறேன். இத்தனையும் வைத்திருக்கிறாயே? எப்படி வாழ்க்கையை வாழுகிறாய் என நீங்கள் கேட்கலாம். வாழ்க்கையே வேண்டாம் என்றுதானே இத்தனையு...
ஆம்! நான் கடவுள்தான். சாத்தான்களின் கடவுள்.