இதுவரை நான் என்னுடைய பெயரை அதாவது எழுத்தாளுமை இக்ரிஸ் என்ற பெயரை கூகிள் செய்து பார்த்தது இல்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. இந்த நவம்பர் மாத துவக்கத்தில் நான் சரியாக ஆன்லைன் வராமல் இருந்தேன். எதையாவது செய்து கொண்டும் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டும் ஊரை சுற்றிக்கொண்டும் மொத்தத்தில் உறுப்படியாக எதையும் செய்யவில்லை என புரிந்து கொள்ளுங்களேன். அப்பறம் எப்படி புத்தகம் வெளியிட்டீர்கள் எனக்கேட்டால் அது தனி வலைபதிவாக வரும். காத்திருங்கள். அப்படி ஒருநாள் மாலை காபி குடித்துக்கொண்டே சிகரெட்டை புகைத்துக்கொண்டிருந்தபொழுது திடீரென தோன்றியது. நிஜ வாழ்வில் இருக்கும் என்னை பலருக்கு தெரியும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எனது சொந்த ஊரில் முக்கிய தலைகள், பெரும்புள்ளிகள், காவல்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், நீதிபதிகள், சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அத்தனை நபர்களின் அலைபேசி எண்ணும் என்னுடைய மொபைலில் இருக்கும். கிட்டத்தட்ட 6,000 ற்கும் மேற்பட்ட தொடர்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். நான் சேமித்து வைக்காத தொடர்புகள் எத்தனை என்பது கணக்கில் இல்லை. ஆனால் இந்த இக்ரிஸ் என்பவன் யார்? அதாவத...
சமீபத்தில் நான் புத்தகங்கள் வெளியிட்டு இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். என்னுடைய பதிவுகளை புத்தகமாக வெளியிடலாம் என பல மாதங்களுக்கு முன்பு ஒரு பப்ளிஷர் சொல்லி இருந்தார். அவர் கூறியதாவது,"ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளில் அறுபது எழுவது பதிகளை எடுத்துக்கொள்ளலாம். புதியதாக முப்பது நாற்பது பதிவுகளை எழுதி கொடுங்கள். மொத்தமாக புத்தகமாக வெளியிடலாம்". நான் 2020 காலகட்டத்தில் சினிமாவில் உதவி இயக்குனராக மற்றும் இயக்குனராக முயன்று தோற்று போன பின் (ஆம். நான் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிய முயன்று இருக்கிறேன். பின் நடிகனாகவும் பணிபுரிய முயன்று இருக்கிறேன். அது குறித்த கதைகள் பின்னாளில் வெளிவரும் அல்லது ஒரு புத்தகமாக வெளியிடுவேன்) என்னுடைய கதைகளை பல தயாரிப்பு நிறுவனங்களிலும் இயக்குனர் கொட்டகைகளிலும் சொல்லி இருக்கிறேன். அப்பொழுது என்னுடைய கதைகள் வெளியாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் என்னுள் உறுத்தியது. சரி என்னுடைய கதைகளை என்னுடைய பெயரில் காப்புரிமை பெற்று வைத்துக்கொள்வோம் என நினைத்தேன். காப்புரிமை (Copyright) புத்தகங்களுக்கு காப்புரிமை/பதிப்புரிமை பெறுவது பெரிய விசயம் இல்லை என்பதுதான...